Wednesday, August 2, 2017

காந்தி ஜெயந்தி

காந்தி ஜெயந்தி




 

காந்தி கணக்கு       விளக்கம்


  • காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட நாமம் என்கிற அர்த்தத்தைதான் உருவாக்கி வைத்திருக்கிறோம் நாமெல்லாம். ஆனால் காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம்என்னவென்று விசாரித்தபோது...மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் மானசீகமாக ஆதரவு அளித்தார்களாம். நேரடியாக எங்களால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. ஆனால் எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்து கொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது காந்தி கணக்கு என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம் என்றார்களாம் அந்த வியாபாரிகள். அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ([1])


மோகன்தாசு கரம்சந்த் காந்தி

.





மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi,குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948),மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை[1] என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம்என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கை[தொகு]
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
Mohandas Karamchand Gandhi

1930களில் மகாத்மா காந்தி
பிறப்புஅக்டோபர் 21869
போர்பந்தர்இந்தியா
இறப்புஜனவரி 30 1948(அகவை 78)
புது தில்லிஇந்தியாவின் கொடி இந்தியா
இறப்பிற்கான
காரணம்
படுகொலை
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்மகாத்மா காந்தி
கல்விலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
அறியப்படுவதுஇந்திய விடுதலைப் போராட்டம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
சமயம்இந்து சமயம்
வாழ்க்கைத் துணைகஸ்தூரிபாய்
பிள்ளைகள்ஹரிலால்
மணிலால்
ராம்தாஸ்
தேவ்தாஸ்

கையொப்பம்

இளமை[தொகு]

மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின்குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயானகஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ்தாஸ் (1900). தனது 16வது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார்.

இளமை வயதில் காந்தியடிகள், வயது 7, 1876
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்திஇங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில்தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.

தென்னாப்பிரிக்காவில்[தொகு]

இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது.
அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள்பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில்முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.

தென்னாப்பிரிக்காவில் காந்தி (1906)
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில்[தொகு]

தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலேரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை (மார்ச் 1930)
பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்துகுஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது; காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

காந்தி-ஜின்னா (காங்கிரஸ்-முஸ்லீம்லீக் பேச்சுவார்த்தை)

காந்தியடிகளுடன் முகமது அலி ஜின்னா
வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்றவெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.
இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.

மகாத்மா[தொகு]

காந்திக்கு “மகாத்மா” என்னும் பட்டம் அளித்தவர் இரவீந்திரநாத் தாகூர்

மரணம்[தொகு]

Gandhi death.jpg

மகாத்மா காந்தியின் அஸ்தி அலகாபாத் சங்கமத்தில் கரைப்பு காட்சி ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தியின் புதல்வர்கள் ராம்தாஸ் (கலசத்துடன்) மற்றும் தேவ்தாஸ் ஆகியோருடன்
1948 ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் நாதுராம் கோட்ஸே என்பவன் புது தில்லியில் காந்தியை சுட்டுக்கொலை செய்தான். அதனால் ஜனவரி 30இந்தியாவில் தியாகிகள் தினமாக நடத்தப்படுகிறது.

கொள்கைகள்[தொகு]

Gandhi and child.jpg
Gandhi spinning.jpg
பகவத் கீதைசமண சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின்எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். இவர் தனது காமத்தை வெல்லும் பொருட்டு பல்வேறு சோதனைகளைச் செய்து வந்தார். அவை பெரும் விமரிசனத்திற்கு உள்ளாகின.அவரது பரிசோதனைகளை அவரது மனைவியின் அனுமதியுடன் தான் செய்தார். இவை இன்றளவும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் விமர்சிக்கப்படுகின்றன. வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும்காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வேறுபாடுகள்[தொகு]

தாழ்த்தப்பட்டவர்களும் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என போராட்டங்கள் எழுந்த பொழுது, அனைவரும் இந்து மதத்தின் அறத்தைப் பேண வேண்டும் என காந்தி சொன்னார் எனஅம்பேத்கர் எழுதி உள்ளார்.[2]
திருநெல்வேலி சைவ சித்தாந்த குருகுலப் பள்ளியில், சமூகத்தில் உயர்ந்த வகுப்பினர்க்கு தனி விடுதி, மற்றவர்க்கு தனி விடுதி என கடைபிடிக்கப்பட்டதை, இந்து மத அறத்தின்படி சரி என காந்தி வாதிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே, பெரியாரை பேராய கட்சியிலிருந்து (congress party) வெளியேற முடிவெடுக்க தள்ளியது. இதனை ஒட்டி, பெங்களூரில் தந்தை பெரியாருக்கும், காந்திக்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இக் கலந்தாய்விலும், காந்தி இந்து மத அறத்தின் தேவையை வலியுறுத்தியதால் பெரியார் பேராய கட்சியிலிருந்து வெளியேற தந்தை பெரியார் முடிவெடுத்தார்.[3] [4].

சுயசரிதை[தொகு]

காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியிலும் An Autobiography: The Story of My Experiments with Truth என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

தமிழ்நாடு நினைவுச் சின்னங்கள்[தொகு]


மகாத்மா காந்தி நினைவு மண்டபம் கன்னியாகுமரி

மகாத்மா காந்தி அருங்காட்சியகம்-மதுரை
தமிழ்நாடு அரசு காந்திக்கு அவரது தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது. மதுரையில் இராணி மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் 1959 முதல் காந்தி அருங்காட்சியகம்செயல்பட்டு வருகிறது.[5] இங்கு அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு சிலை ஒன்று வளாகத்திலும், மற்றொன்று அருங்காட்சியகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள் அமரக்கூடிய அளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது.[6]

பகத்சிங்கின் தூக்குதண்டனை[தொகு]

பகத் சிங் கின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார்.[7] தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம்? என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டன.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து
Photobucket

சுபாஷ் சந்திர போஸ்


ஆகஸ்ட் 18 , 
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 
நமது தேச தந்தை நேதாஜி பயணித்த விமானம் தைவானில் விபத்துக்குள்ளான தினம் 68ம் ஆண்டு அஞ்சலி !! 

இந்திய பிரஜைகளில் இதுவரை 

இறப்பு சான்றிதழ் 

கொடுக்கப்படாத மனிதர். 


 நேதாஜி




நேதாஜி என்று நாம் இந்தியா மக்களால் பெருமையுடன் அழக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் 
ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிதறி உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டிய ஒன்றே தவிர, கெஞ்சியும் கேட்டும் பேரம் பேசியும் பெருவதல்ல ..." என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர்....

சுக்கைப்போல, கடகைப்போல சும்மா பெற்றதில்லை நம் சுதந்திரம் என்று சொல்லும் போதே, இன்றைக்கும் நம் இளைஞர்கள்  சிலிர்த்தெழுந்து நினைவில் நிறுத்துவது நேதாஜியை தான்.,

அவர் மாபெரும் தியாகி விவேகானந்தரின் கருத்துகளால் 16 வயதிலேயே ஈர்க்கப்பட்டு, வீட்டு துறந்தவர் .

ஐ.சி.எஸ்., என்ற உயர் பதவியில், 24 வயதில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்வு பெற்று அமர்ந்த்தவர். இந்த பதவியால் இங்கிலாந்து மக்களுக்கு மட்டுமே லாபம், இந்தியா மக்களுக்கு பிரயோசனமில்லை என்பதை அறிந்த அடுத்த கணமே அந்த கணமே அந்த பதிவையே துறந்தவர்.

குடும்ப சொத்தாக தனக்கு வந்த பங்களவை 35 வயதில், 'தேவையில்லை' என தேசத்திற்காக அற்பணித்தவர்.

காங்கிரஸ் கட்சி தலைவராக 42 வயதில் வெற்றி பெற்ற போதும் அந்த பதவியால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிய உடனயே அந்த பதவியே தூக்கி எறிந்தவர்.

ஜெர்மன், ஜப்பான், உள்ளிட்ட உலக நாடுகளுக்கு 44 வது வயதில் பயணம் செய்து, நாட்டின் விடுதலைக்காக வித்திட்டவர். 85,000 வீரர்கள் கொண்ட இந்தியா தேசிய ராணுவம் அமைத்து, மொத்தம் அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை குலை நடுங்க வைத்தவர். அந்த படையில் ஜான்சி ராணி என்ற பெண்கள் பிரிவையும் ஏற்படுத்தியவர்...

நம்மிடையே வாழ்ந்துக் கொண்டு இருப்பவரான தேச தலைவர் நேதாஜி, சென்னைக்கு இரண்டு முறை வருகை தந்துள்ளார் 

சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள காந்தி சிகரம் என்ற வீட்டிற்கு 1939 ஆண்டு வருகை தங்கியுள்ளார்.



தேச பக்தரான அய்யசாமி என்ற பொறியாளர், 1930-ல் கட்டிய இந்த வீட்டின் மாடியில் உள்ள தனி அறையில் தாங்கினார் நேதாஜி 

இப்போது, அய்யசாமியின் பேரனன. எஸ்.பி.தனஞ்ஜெயா என்பவர் இந்த வீட்டை மட்டுமல்ல, நேதாஜி தொடர்பான பல ஆவணங்களையும் புகைப்படங்களையும் பொக்கிஷம் போல பாதுக்காத்து வருகிறார்.



நேதாஜி வந்து தங்கிருந்த போது ஆன செலவு,தனியாக ஒரு பேப்பரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மூட்டை அரிசி 8 ரூபாய் என்றும், மூன்று நாளைக்கு தேவையான துவரம் பருப்பு வாங்கிய வகையில் 2 ரூபாய் என்றும் கணக்கு போடுகிறது.

கம்பீரமாக பாரதி சாலையில் நேதாஜி நடந்து வருவது, மற்றும் குழுவாக அவர் எடுத்துக் கொண்ட படங்கள் உள்ளன. சில படங்களில் அவரே கையெழுத்து போட்டுள்ளார்.

மூன்றாவது மாடியில் அவர் தங்கிருந்த அறை சிறியது என்றாலும் அழகானது. அங்கு இருந்து பார்த்தால், கடற்கரையும் இந்த பக்கம் அண்ணாநகர் கோபுரமும் தெரியுமாம். இப்போது கான்கிரீட் காடாகி விட்ட சென்னையில் அதெல்லாம் மறைந்துவிட்டது. 

நேதாஜியின் தமிழக வருகையை சரியான ஆவணங்களுடன், நிறைய ஆதாரங்களையும்  கொண்டு சாட்சியாக நிற்கும் நினைவு இல்லத்தை பராமரிப்பது தற்போது தனஞ்ஜெயாக்கு சிரமாக உள்ளது. வாடைகைக்கு விட்டால், ஒரு நொடியில் வர்த்தகமயமாக்கி,  இதன் அருமை தெரியாமல் செய்துவிடுவார். ஆகவே நேதாஜியின் நினைவுகளை தங்கி நிற்கும் இந்த இடத்தை, அதன் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்க விரும்புவர்களும், நேதாஜியின் நினைவு இல்லத்தை சுற்றி பார்க்க விரும்புவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 09381001793


(இந்த செய்தி வெளி வந்தது வராமலரில் ஜனவரி 17, 2010 ளில் - இது அனைத்து இந்தியரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று..... இப்போது இந்த வீடு எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை...... இருந்தாலும் நமது உறவுகள் தெரிந்து கொள்ளட்டும் என்ற நோக்கத்தில் பதிகிறேன்...... சென்னையில் உள்ள நம் உறவுகளுக்கு நேரம் கிடைத்தல் கண்டிப்பாக போய்  பாருங்கள்)


ஜெய் ஹிந்த்





ஒரு விடுதலை வீரன் மரணிப்பதில்லை,அவன் அந்த
தேசத்தை நேசிக்கும் ஆயிரம் ஆயிரம்
தேசபக்தர்களின் இதயங்களில் என்றும்
வாழ்ந்து கொண்டே இருப்பான்.
அப்படியான ஒரு விடுதலை வீரன் தான்
நேதாஜி,நேதாஜி என அழைக்கப்படும்
விடுதலை வீரன் “நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்”
ஆவார்.
ஈழத்து வரலாற்றில் தமிழீழ தேசிய தலைவர்
தனது ஆத்மார்த்த குருவாக இவரையே தன்
நெஞ்சில் ஏற்றுக்கொண்டாதாக நம்
வரலாறு பெருமைப்பட்டுகொள்ளுகிறது.
யார் இந்த நேதாஜி....
அவசரக்காரர்-ஆத்திரக்காரர் என்று கூறினார்
மகாத்மா காந்தி
படபடப்பானவர்-பண்படாதவர் என்று கூறினார்
ஜவகர்லால் நேரு அவர்கள்
ஆனால் வரலாறு ஏற்றுக்கொண்டது அவன் ஒரு
விடுதலை வீரன்
கொள்கை வீரன் என்று.
தாய் நாட்டின் விடுதலைக்காக தனது 24 வயதில்
I.C.S என்ற உத்தியோகத்தை துாக்கி எறி்தார்.
35 வயதில் தனக்கு சொந்தமாக இருந்த கட்டாக்
நகரில் தான் பிறந்த மாளிகையை தேசத்திற்காக
அர்பணித்தார்.
42 வயதில் தான் தலைமை தாங்கியிருந்த அகில
இந்திய காங்கிரஸ் பதவியை துாக்கி எறிந்தார்.
44 வயதில் தன் தேச விடுதலைக்காக தாய்
நாட்டை விட்டு பிரிந்து அயல்தேசம் சென்றார்.
இப்படியாக தனது தேசத்தின் விடுதலைக்காக
முழுமையாக அர்பணிப்புடன் போராடிய
ஒரு விடுதலை வீரன் இவன்.
தேசத்தை விட்டு வெளியேறி இருப்பினும் கொண்ட
கொள்கையில் ஒரு உறுதியுடன் அன்றைய உலக
ஒழுங்கை நன்கு விளங்கிக்
கொண்டு அதனை தனது தேசத்தின்
விடுதலைக்காக மாற்றியமைத்த ஒரு அரசியல்
தலைவனும் கூட இவன்.
தன் உயிரையே பணயம் வைத்து ஜேர்மனியிலும்,
ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும்
அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர
அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத்
திரட்டி போரிட்டு உலக
வரலாற்றிலேயே ஒரு புதிய
சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் கூட
இந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களே.!
ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுடன்
நேதாஜி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு அதில்
கைழுத்திட்டார். இந்திய நாட்டில் வேரூன்றிய
அன்னிய ஆட்சியை அகற்றுவதற்குத் தேவையான
அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்த
மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தில் கூறியிருந்தன.
அன்றைய கால கட்டம் 2ம் உலகப்போர் இடம்பெற்ற
காலமாதலால் அங்கு காணப்பட்ட அரசியல் சாதக
தன்மையை தனது தேசத்தின் விடுதலைக்கான
இலகுவழியாக மாற்றும் எண்ணத்துடன் அவர்
செயற்பட்டார்.இத
ை அன்று மகாத்மா காந்தி அவர்கள் கடுமையாக
எதிர்த்தும் இருந்தார்.இருந்தும் இவர்
தனது பாதையை மாற்றியதாக இல்லை.
1943 ஒக்டோபர் மாதம் 21ம் திகதியன்று காலையில்
சிங்கப்பூர் ‘தைதோவா கெகிஜோ’ வில் நடைபெற்ற
மகாநாட்டில் தற்காலிக சுதந்திர இந்திய
அரசை பிரகடனப்படுத்திய நேதாஜி
“நமக்கென்று ஓர் இராணுவமும்
அமைக்கப்பட்டு விட்டதனால்,
நமக்கென்று ஒரு சுதந்திர
அரசை அமைப்பது சாத்தியமும், அவசியமும்
ஆயிற்று. இந்தியாவின் முழு விடுதலைக்கான
இறுதிப்போரை நடாத்துவதற்காகவே இந்தத்
தற்காலிக அரசு பிறந்திருக்கின்றது”-
என்று முழங்கினார்.
இதனை தொடர்ந்து ஒக்டோபர் 23ம் திகதியில்
இருந்து நவம்பர் 18ம் திகதிக்குள்
ஜப்பான, பர்மா, பிலிப்பைன்ஸ்,
ஜெர்மனி குரொஷியா, சீனா, மஞ்சுகோ, இத்தாலி,
தாய்லாந்து
போன்ற அரசுகள் தற்காலிக சுதந்திர இந்திய
அரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன.அத
ற்கு அத்திவாரமாக ஏற்கனவே
இந்திய தேசிய இராணுவத்தைக்
கட்டியெழுப்பி பயிற்சி கொடுத்திருந்தார
்.பயிற்சி முற்றுப்பெற்ற வீரர்களைப் பகுதி பகுதியாக
பிரித்தார். சிங்கப்பூர், பர்மா, மலேயா,
தாய்லாந்து நாடுகளுக்குத் தன்னுடைய
படை வீரர்களை அனுப்பினார்.
நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின்
அங்கத்தவர்களாக ஜான்சிராணி என்கின்ற பெண்கள்
படையும் பாலர் படையும் இருந்தன.
பன்னிரண்டு வயதிற்கு மேல்
பதினெட்டு வயதிற்கு உட்பட்ட இளையவர்களின்
படையே பாலர் படையென அழைக்கப்பட்டது.
இந்தப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட
இளையவர்கள் இருந்தார்கள்.
அத்துடன் தனது படைகளை கட்டுக்கோப்பாகவும்
ஒழுக்கமுள்ள சிறந்த வீரர்களாகவும் அவர்
உறுவாக்கியிருந்தார்.இதனை அவதானித்த
ஜப்பான் அரசு தான் 2ம் உலகபோரில் கைப்பற்றிய
அந்தமான் நிக்கோபர்
தீவுகளை நேதாஜியிடமே கையளித்தது.
1943ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம்
திகதி இந்தியாவின் மூவர்ணக் கொடியை அந்தமான்
தீவில் நேதாஜி பறக்க விட்டார்.
1944 மார்ச் 18 இந்திய மண்ணில் நேதாஜியின்
படைகள் கால் பதித்தது.தொடர்ந
்து நிலங்களை கைப்பற்றியபடி முன்நேறிய
இவரது படைகள் அமெரிக்க அரசிடம் அடிபணிந்த
ஜப்பானால் ஆட்டம் காணத்தொடங்கியது.படைகள்
மீண்டும் பர்மாவிற்கு பின்வாங்கின,இருந்தும் அந்த
தோல்வியை அவர்
இது நாம் ஆடிய முதல் ஆட்டம் இதில் நாம்
தோற்றாலும் அடுத்துவரும்
வெற்றிகளுக்கு இது படிக்கல்லாக அமையும்
என்றார்.
1945 ஆகஸ்ட் மாதம் 18 ம்
திகதி ஜப்பானுக்கு போகும் இவர் பயணம் செய்த
விமானம் வழியில் தீப்பற்றி விபத்துக்குள்ளாகியதால்
இவர் மரணமடைந்ததாக
இன்று வரை நம்பப்படுகிறது.
குறிப்பு: தமிழீழ தேசிய தலைவர் அவர்கள்
இவரை பற்றி குறிப்பிடும் போது
சிறுவயது முதல் இந்திய விடுதலைப்போராட்ட
வரலாறுதான் என்னைக் கவர்ந்திருந்தது. இநதப்
போராட்டத்தில் நேதாஜி அவர்கள் கொண்டிருந்த
பங்கு என்னை ஆழமாகத் தொட்டது.
‘சுபாஸ் சந்திரபோஸின் வாழ்க்கை என்னைக்
கவர்ந்தது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் நூல்
வடிவில் வந்தன. அவற்றை படித்தேன்.
அவை அப்படியே என் நெஞ்சில் படிந்தன.
கடைசித்துளி இரத்தம் இருக்கும்வரை என்
மண்ணுக்காக நான் போராடுவேன். என்ற
நேதாஜியின் வீரஉரையை எடுத்துக்காட்டாகச்
சொல்லலாம். நினைவிற்கு வரும்போதெல்லாம்
இந்தச் சொற்கள் என் நெஞ்சை சிலிர்க்க
வைத்தன.என்றார்.
இப்படியான ஒரு வீரனை ஈன்றெடுத்த அந்த
வீரத்தாயின் பெயர் தான்
பார்வதி.
இங்கு ஒரு விடையம் மிக தெளிவானது.அதாவத
ு இயற்கை மட்டும் அன்றி வரலாறுகள் கூட
ஒரு வட்டப்பாதையில் திரும்ப திரும்ப
நிகழ்பவையே.
ஈழவிடுதலை பயணத்தில் இன்று ஏற்பட்டிருக்கும்
இந்த
தொய்வு நிலையானது அல்ல,இதற்கு பின்னால்
நாமும் நம் மக்களும் நடந்து போகவேண்டிய
ஒரு கடிணமான பாதை உள்ளது.
அதற்கு வேற்றுமைகளை கலைந்த ஒரு ஒற்றும
அவசியம். விட்ட தவறுகலை திருத்தி நாம்
பயணிக்கவேண்டிய
இலக்கை நோக்கி நடக்கவேண்டி விடைபெறுகிறேன்.

"கடைசித்துளி இரத்தம் இருக்கும்வரை என் 

மண்ணுக்காக நான் போராடுவேன்"

-மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் .

1939 –ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ்
 தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் 

நேதாஜி . நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து 

வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக 

ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் 

போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் 

மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை 

நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும், 

சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் 

இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி 

தனக்குப் பெரிய இழப்பு என்று 

பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து 

உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். 

அதனால், அவரைச் சமாதானப்படுத்த 

நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து 

விலக்கப்பட்டார். அப்போது அவர் 

ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி! 

அக்கட்சிக்கு தென்னிந்தியாவில் ஆதரவளித்த 

ஒரே தலைவர் பசும்பொன் 

உ.முத்துராமலிங்க தேவர். தேவர் என் உடன் 

பிறவா சகோதரர் என்று நேதாஜி 

வெளிப்படையாகவே பாராட்டினார். எனவே 

அவரையே தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் 

இன் தலைவராக்கினார் நேதாஜி. காந்தி 

மற்றும் ஒட்டுமொத்த காங்ரஸ் ஏ நேதாஜியை எதிர்த்த அக்காலகட்டத்தில் 

இந்திய விடுதலைக்கு நேதாஜியுடன் 

இணைந்து பெரிதும் பாடுபட்டவர்கள் “

தென்னிந்திய நேதாஜி” என்று அழைக்கப்பட்ட 

பசும்பொன் தேவரும் அவரது பல கோடி 

உறவினர்களும்




நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்..


கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் "ஹிட்லர் " என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு...


ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது " என்று கேட்டார்.


நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது" என்றார்...!


{ஜன. 23, 1897} நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்


இந்திய மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் 1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதேநாளில் வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரவு வழியை உடையது. இவரது தாயார் பிரபாவதி தேவி ‘தத்’ எனும் பிரபுக் குலத்திலிருந்து வந்தர். 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக இவர் பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்தபடியால் சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய், தந்தையரைவிட தன்னை கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார். 
ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியை காதலித்து, 1937 டிசம்பர் 27-ல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1942-ல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வடஇந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்துவிட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 
1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை.
1992-ல் சுபாஷ் சந்திரபோஸுக்கு இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.

Photobucket